யோசித்துப் பார்க்கிறேன்.
நானும் பார்வதியை கல்யாணம் பண்ணி இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னும் என் சிறுபால்ய நண்பன் ராம்தாஸ் வீட்டிற்கு ரிசர்வ் லைனில் இருந்து மதுரை மேல வைத்தியநாதபுரத்திற்கு கிட்டத்தட்ட ஒரு பத்து கிலோமீட்டர் தூரம் சைக்கிளிலே சென்று வருவேன்.
அதற்குக் காரணம்
ராம்தாசும் நானும் சிறு பிராயத்தில் இருந்தே நண்பர்கள்.
சேர்மன் முத்துராமர் வீதியில் எங்கள் இரண்டு குடும்பங்களுக்கும் ரத்த பந்தம் போல் சுமார் 30 வருட பழக்கம்.
நானும் அவனும் ஒரே வயது உடையவர்கள் என்பதாலும்
விளையாடுவதிலும் ஊர் சுற்றுவதிலும் இணைபிரியாமல் இருந்தோம்.
மேலும் நான் என்ன நினைக்கிறேன் என்பதை அறிந்து பேசுவான்.
நான் ஏதும் தவறு செய்தால் அதனை தயங்காமல் சுட்டிக் காட்டுவான் அதனாலே அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
எங்க அப்பாவும் கேசவனும் எப்படி இருந்தார்களோ அது மாதிரி தானே நானும் இருந்திருக்கிறேன்.
விதை ஒன்று போட்டால்...
என் அம்மா மாதிரி தானே பார்வதியும் மனதளவில் பெரும் துன்பப்பட்டு இருந்திருப்பாள் என்று பட்டபின் வருந்துகிறேன்.
செல்போன் அடிக்க யார் என்று பார்த்தேன் என் மக கார்த்திகா தான்.
அவ எம்பிஏ வரைக்கும் படிச்சிட்டு ஒரு கேரியர் நெட்ல வேலை பாத்துட்டு இருக்கும் போது அவளுக்கு பிடித்த எனது சகலை மகன் ஹரியுடன் படித்த மனோ விக்னேஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தோம்.
திருமணத்திற்கு பின் முதல் குழந்தை ஜனிக்கவும் வேலை செய்யும் இடம் சென்னையில் குடியிருந்த பகுதியிலிருந்து தூரமாகவும் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகவும் இருந்ததால் போய் வருவது சரிபடாது என்று
வேலைக்கு வேண்டாம் என்று முடிவு செய்து வீட்டில் இருந்து விட்டாள்.
அழகான பெண் குழந்தை பிறந்து மகிழினி என்று பெயரிட்டு தனி ஆளாக அவளை வளர்ப்பதற்குள்ளையே பெரும் சிரமப்பட்டாள்.
அதன் பின் இரண்டு வருடத்தில்
இரண்டாவது குழந்தை ஆதினி பிறந்து விட்டாள்.
கார்த்திகாவின் மாப்பிள்ளை தற்போது தான் சீமன் என்ற பாரின் லீடிங் கம்பெனியில மார்க்கெட்டிங் மேனேஜரா செலக்ட் ஆகி வேலை பார்க்கிறார்.
இந்த கம்பெனில வேலை பார்க்கணும்னு அவருடைய வாழ்நாள் கனவு. ஆனாலும்
பிரஷரான வேலை தான்.
அதனால அவர் வீட்டுக்கு வந்ததும் ரிலாக்ஸ் ஆயிட்டு செல்லு; டிவினு பார்த்துகிட்டு இருப்பார்.
என் பொண்ணு எம்பிஏ வரைக்கும் படிச்சிட்டு நல்ல வேலையும் பார்த்து கல்யாணம் பண்ணதுக்கு அப்பறம் இப்படி காலையில அடுப்படியிலே இருந்து வீட்டுக்காரருக்கு எல்லாம் செய்து கொடுத்து அவரை கிளப்பியும் , பிள்ளைகளை ஸ்கூலுக்கு கிளப்பியும் ஸ்கூலுக்கு அனுப்பி திரும்ப கூட்டி வந்து வீட்ல பிள்ளைகளை பார்த்து மிகவும் கலைத்துப் போவாள்.
சாயந்தரம் மாப்ள வந்ததும் அவர்கிட்ட பிள்ளைகளை விட்டுட்டு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கலாம்னு நினைக்கிறப்ப
மாப்பிள செல்லிலும் டிவிலயும் பொழுத கழிக்கிறத பார்த்து அவளுக்கு கோபமும் எரிச்சலும் வந்து பிரஷர் கூடி
ரெண்டு பேருக்கும் இதனால் அடிக்கடி சண்டை வரும்.
அப்பெல்லாம் என் மக எனக்கு கால் பண்ணி மாப்பிள்ளை கிட்ட கொஞ்சம் சொல்ல சொல்லுவா.
இப்பவும் அதுக்காக தான்..
வினை விதைத்தால்....
No comments:
Post a Comment