Monday, October 5, 2026

ரிசர்வ்லைன்

 ரிசர்வ் லைன் 


யூடியூபில் தற்செயலாக அமெரிக்க ஹார்வேர்ட் யுனிவர்சிட்டி சென்று தாவைகாவில் களப்பணி ஆற்றம் அஸ்விதா உடன் தினத்தந்தி சேனலில் நேர்காணல் கண்ணில் பட்டது.


ஆச்சரியத்துடன் அதை பார்க்க ஆவலாய் இருந்ததால் அதை பார்த்தேன். 

அதில் அஸ்விதா அவர்களிடம் 

நேர்காணல் காண்பவர் தற்போதைய இளைஞர்களுக்கு புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் உண்டாக என்ன ஆலோசனை கூறுகிறீர்கள்? என்று கேட்க 


அப்போது அவர் நான் சிறுவயதாக இருக்கும் பொழுது நாவல்களை தான் அதிகம் படிப்பேன். அது மாதிரி நமக்கு பிடித்ததை படிக்க வேண்டும் பொதுவாக கதைகள் என்று படிக்கும் பொழுது அது உங்களை உள்ளே ஈர்த்துக் கொள்ளும். 


இதைக் கேட்டதும் என் நினைவு நான் சிறுவனாக இருந்த பொழுது கதைகளை வாசிக்க தொடங்கியது நினைவுக்கு வந்தது. 


நான் அப்பொழுது ஆறாம் வகுப்பு மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தியாகராஜர் மாடல் ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தேன். 


எங்கள் வீடு முனிச்சாலை அருகே உள்ள பாண்டியரன் மில் கேட் பக்கம் இருந்தது. 


அங்கிருந்து நடந்தே தான் ஸ்கூலுக்கு சிமெண்ட் ராம்நாடு ரோடு வழியாக போக வேண்டும். 


அந்த ரோடு காமராஜர் காலத்தில் போட்டதாக சொல்லுவார்கள். ஏர்போர்ட் ரன்வே மாதிரி அது இருக்கும். 


முனிச்சாலைல ஆரம்பிச்சு தெப்பக்குளம் வரைக்கும் அந்த ரோடு இருக்கும். 


நாங்க அந்த வழியா நடந்து ஸ்கூலுக்கு போகும் போது அப்ப வீடு கட்டுவதற்கு செங்கல் எல்லாம் சிலைமான்ல இருந்து மாட்டு வண்டில தான் மதுரை டவுனுக்கு போகும்.


செங்கலை இறக்கிட்டு திரும்ப வரும்போது நாங்க அந்த மாட்டு வண்டிக்காரர் கிட்ட கேட்டு அந்த மாட்டு வண்டியில் ஏறி ஸ்கூலுக்கு போவோம்.


அந்த மாட்டு வண்டியில் ஏறுறது ஒரு தனி அனுபவமா இருக்கும்.

 

அந்த மாட்டு வண்டியில் லாரில சேஸ் நீளமா இருக்கிற மாதிரி மாட்டுவண்டி ரெண்டு பக்கமும் நீள �

பொங்கல்

 பொங்கல்

டீக்கடை அப்படின்னு சொன்னதும் எனக்கு நான் சின்ன வயசுல பாண்டியன் மில் கேட்கல குடியிருந்த ஏரியா தான் எனக்கு ஞாபகத்துக்கு வரும். 


அப்பெல்லாம் காபி டீ பெரும்பாலும் வீடுகள்ல காலையில போட மாட்டாங்க .


ஏன்னா பால் அப்ப கிடைப்பருமை கம்மியா இருந்தது.


 இன்னும் சொல்லப்போனாஅந்தப் பால வாங்குறதுக்கு பால் பூத்துள முன்னாடியே போய் காத்து கிடக்கணும். 


அந்தப் பாலை வாங்கிட்டு வந்து


விறகு அடுப்ப பத்த வச்சு பால காயவைத்து காபி, டீய குடிக்கிறதுக்குள்ள குடிக்கிற ஆசையே போயிரும். 


அதனால வீட்டு பொம்பளைங்க பெரும்பாலும் டீ கடையில டீ 15 பைசாவுக்கு ரெண்டு வாங்கி குடும்பமே குடிச்சிடுவாங்க. 


இதுல எங்கள மாதிரி சின்ன பையன்கள் தான் டீ கடைக்கு அனுப்புவாங்க. ஆனா நாங்க டீக்கடைக்கு போக மாட்டோம்னு அடம் பிடிப்போம்.


ஏன்னா டீ கடைக்கு போனம்னா


அங்க தெரு குழாயில் தண்ணீர் பிடிக்கிற மாதிரி தூக்குவாழிய கைல வச்சுக்கிட்டு பெரிய பொம்பளைங்களும் எங்கள மாதிரி சின்ன பையன்களும் நிறைய பேரு நிப்பாங்க. 


இதுல பொம்பளைங்களுக்கு முன்னுரிமை உடனே போட்டு கொடுப்பாங்க .


எங்களை மாதிரி சின்ன பையன்கள காக்க வப்பாங்க. 


இதுல கடைக்கு வந்த ஆம்பளைகளுக்கு குடிக்கிறதுக்கு டீ முதல்ல போட்டு கொடுப்பாங்க. 


அதனாலேயே நாங்க போறதுக்கு கஷ்டமா இருக்கும். அதனால போக மாட்டோம்.


இத தெரிஞ்சுகிட்டு பொம்பளைங்க அப்ப முட்டைக்கோசுன்னு ஒரு இனிப்பு உருண்டையா இருக்கும். அதை திங்குறதுக்கு எங்களுக்கு ரொம்ப ஆசையா இருக்கும்.  அதை நீ ஒன்னு வாங்கிக்கோ அப்படின்னு சொல்லுவாங்க. அப்ப நாங்க தூக்கு வாழிய எடுத்துக்கிட்டு துள்ளி குதிச்சு டீ கடைக்கு ஓடுவோம். 


ஆனா டீ கடையில கூட்டத்தை பார்த்து மலச்சு  போய் தான் நிப்போம். 


டீ மாஸ்டர் நம்ம தூக்கூ வாழிய வாங்கி டீ போட அடுக்கி வைத்து விடடாலே அது ரிசர்

பட்டறிவு

 யோசித்துப் பார்க்கிறேன். 

நானும் பார்வதியை கல்யாணம் பண்ணி இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னும் என் சிறுபால்ய நண்பன் ராம்தாஸ் வீட்டிற்கு ரிசர்வ் லைனில் இருந்து மதுரை மேல வைத்தியநாதபுரத்திற்கு கிட்டத்தட்ட ஒரு பத்து கிலோமீட்டர் தூரம் சைக்கிளிலே சென்று வருவேன்.


அதற்குக் காரணம்

ராம்தாசும் நானும் சிறு பிராயத்தில் இருந்தே நண்பர்கள். 


 சேர்மன் முத்துராமர் வீதியில் எங்கள் இரண்டு குடும்பங்களுக்கும் ரத்த பந்தம் போல் சுமார் 30 வருட பழக்கம். 


நானும் அவனும் ஒரே வயது உடையவர்கள் என்பதாலும் 

விளையாடுவதிலும் ஊர் சுற்றுவதிலும் இணைபிரியாமல் இருந்தோம். 


மேலும் நான் என்ன நினைக்கிறேன் என்பதை அறிந்து பேசுவான்.

நான் ஏதும் தவறு செய்தால் அதனை தயங்காமல் சுட்டிக் காட்டுவான் அதனாலே அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும். 


 எங்க அப்பாவும் கேசவனும் எப்படி இருந்தார்களோ அது மாதிரி தானே நானும் இருந்திருக்கிறேன்.


விதை ஒன்று போட்டால்...


என் அம்மா மாதிரி தானே பார்வதியும் மனதளவில் பெரும் துன்பப்பட்டு இருந்திருப்பாள் என்று பட்டபின் வருந்துகிறேன்.


செல்போன் அடிக்க யார் என்று பார்த்தேன் என் மக கார்த்திகா தான்.


அவ எம்பிஏ வரைக்கும் படிச்சிட்டு ஒரு கேரியர் நெட்ல வேலை பாத்துட்டு இருக்கும் போது அவளுக்கு பிடித்த எனது சகலை மகன் ஹரியுடன் படித்த மனோ விக்னேஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தோம்.


திருமணத்திற்கு பின் முதல் குழந்தை ஜனிக்கவும் வேலை செய்யும் இடம் சென்னையில் குடியிருந்த பகுதியிலிருந்து தூரமாகவும் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகவும் இருந்ததால் போய் வருவது சரிபடாது என்று

வேலைக்கு வேண்டாம் என்று முடிவு செய்து வீட்டில் இருந்து விட்டாள். 


அழகான பெண் குழந்தை பிறந்து மகிழினி என்று பெயரிட்டு தனி ஆளாக அவளை வளர்ப்பதற்குள்ளையே பெரும் சிரமப்பட்டாள். 


அதன் பின் இரண்டு வருடத்தில் 

இரண்டாவது குழந்தை ஆதினி பிறந்து விட்டாள்.


 கார்த்திகாவின் மாப்பிள்ளை தற்போது தான் சீமன் என்ற பாரின் லீடிங் கம்பெனியில மார்க்கெட்டிங் மேனேஜரா செலக்ட் ஆகி வேலை பார்க்கிறார். 


இந்த கம்பெனில வேலை பார்க்கணும்னு அவருடைய வாழ்நாள் கனவு. ஆனாலும்

 பிரஷரான வேலை தான். 


அதனால அவர் வீட்டுக்கு வந்ததும் ரிலாக்ஸ் ஆயிட்டு செல்லு; டிவினு பார்த்துகிட்டு இருப்பார். 


என் பொண்ணு எம்பிஏ வரைக்கும் படிச்சிட்டு நல்ல வேலையும் பார்த்து கல்யாணம் பண்ணதுக்கு அப்பறம் இப்படி காலையில  அடுப்படியிலே இருந்து வீட்டுக்காரருக்கு எல்லாம் செய்து கொடுத்து அவரை கிளப்பியும் , பிள்ளைகளை ஸ்கூலுக்கு கிளப்பியும் ஸ்கூலுக்கு அனுப்பி திரும்ப கூட்டி வந்து வீட்ல பிள்ளைகளை பார்த்து மிகவும் கலைத்துப் போவாள். 


சாயந்தரம் மாப்ள வந்ததும் அவர்கிட்ட பிள்ளைகளை விட்டுட்டு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கலாம்னு நினைக்கிறப்ப 

மாப்பிள செல்லிலும் டிவிலயும் பொழுத கழிக்கிறத பார்த்து அவளுக்கு கோபமும் எரிச்சலும் வந்து பிரஷர் கூடி

 ரெண்டு பேருக்கும் இதனால் அடிக்கடி சண்டை வரும். 


அப்பெல்லாம் என் மக எனக்கு கால் பண்ணி மாப்பிள்ளை கிட்ட கொஞ்சம் சொல்ல சொல்லுவா.


இப்பவும் அதுக்காக தான்..

வினை விதைத்தால்....

சொர்ணம்

 சொர்ணம் 


சொர்ணா ஆச்சி ரிக்ஷால  கோரிப்பாளையம் பெரிய ஆஸ்பத்திரி கிட்ட போகைலயே இறந்துட்டாங்களாம்! என்ற செய்தி கேட்டு எல்லோருக்கும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஆச்சிக்கு,

 அவங்க பயந்ததை விட சாவு ரொம்ப லேசா ஆயிடுச்சுன்னு எல்லாருக்கும் ஒரு சந்தோஷம். சாகும்போது ஆட்சிக்கு 80 வயசு இருக்கும்.


ஆச்சிக்கு சாவுன்னா ரொம்ப பயம். 

சாவு எப்படி இருக்கும்கிற எண்ணமே  அவங்கள இந்த பூட்டன் பிறந்தவுடன்

 இந்த பேத்தி சடங்கு ஆயிட்டா இந்த பேரனுக்கு கல்யாணம் ஆயிட்டா கண்ண மூட வேண்டியது தான்னு சொல்லுவாங்க.


கேலிக்காக ஒவ்வொருவரும், ஒவ்வொரு சுப நிகழ்வப்ப என்ன பூட்டன் பிறந்தாச்சு இல்ல பேத்தி கல்யாணம் முடிஞ்சாச்சு இல்ல 

அப்பரமென்ன? என்று கேட்பார்கள். 

நானும் கேட்டிருக்கிறேன்.


ஆனா இதை ஏன்  அப்ப கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாம கேட்டோம் ?


மத்த பெரியவங்க கேட்கிறதை பார்த்து கேட்டோமா? 

ஏன் பெரியவங்க அந்த மாதிரி கேட்டாங்க?

 இவ்வளவுக்கும் அந்த ஆச்சி தனியாத்தானே அது பாட்ட பார்த்துக்கிட்டு இருந்துச்சு. 

ஆனால் இப்பதான் அது குற்ற உணர்வாவே தோணுது தோணுது. 


ஏன்னா எனக்கும் வயசாகும் போதுதான் சாவு பயமும் வருகிறது.


நானும் மத்தவங்கள மாதிரி ஆட்சி கிட்ட ஏன் அப்படி கேட்டோம்னு நினைக்கும் போது இதயத்தை சத்யா புரிஞ்ச மாதிரி இருந்தது.


இவ்வளவுக்கும் சொர்ணாச்சி எல்லார்கிட்டயும் பாரபட்சம் இல்லாம ரொம்ப அன்பா இருப்பாங்க.

 அதுவும் யார் வீட்டுக்கு போனாலும்  வீட்டு வேலைய எல்லாம் இழுத்துப் போட்டு செய்வாங்க .

ஏன் பாண்டியர மில் கேட்டு எங்க வீட்டுக்கு வந்தா சொந்தக்காரங்க வீடுன்னு இல்லை, பக்கத்து வீடுகளுக்கு கூட போயி வேலை செய்வாங்க. அதனால தெருவே ஆச்சி வந்தா ஆச்சிய கொண்டாடும்.


அதேபோல நம்ம வீட்டு பிள்ளைங்கன்னு இல்லாம தெருப் பிள்ளைகளுக்கும் பண்டத்தை பிரித்துக் கொடுக்க�

ரேணிகுண்டா ரேணிகுண்டா படம் வந்தப்ப நான் தியேட்டர்ல போய் பார்த்தேன். அந்த படத்துல ஹீரோவும் -ஹீரோயினும் சந்தித்து காதல் வயப்படும் பாட்டு மழை பெய்யும் பொது ..... காட்சியில் அந்த ஹீரோயினை பார்த்து அப்படியே என்னை நான் மறந்து திரைக்குள் போய்விட்டேன். என் மனம் பழைய நினைவுகளுக்குள் சென்றது. ஒரு பெண் பிள்ளையை பார்த்து நான் முதன்முதலில் அசந்து காதல் வயப்பட்டதும் அந்தப் பெண் இதைவிட அழகாக இதே காஸ்டியூமில் இதைவிட கலராக நெறைய தலைமுடியுடன் அவளை நான் பார்த்து அதிசயத்த நாள் மனதில் படமாக ஓடியது. நான் அப்ப  +1 மதுரை சௌராஷ்ட்ரா மேல்நிலைப் பள்ளியில் எக்கனாமிக்ஸ் படித்துக் கொண்டிருந்தேன். எப்பொழுதும் போல் காலையில் பள்ளிக்கு பாண்டிய மில்க் கேட் தெருவிலிருந்து மெயின் ரோட்டிற்கு வந்து கொண்டிருந்தேன். அந்த ரோட்டிற்கு மேற்கே மணல் ரோட்ட ஒட்டி ஒரு பங்களா இருக்கும். அந்த மாதிரி பங்களாகாரங்கதான் சொந்தமா கார் வச்சிருப்பாங்க. அப்ப மதுரையில மொத்தமே ஒரு பத்து கார் தான் இருக்கும். நான் அந்த ரோட்டிற்கு நடந்து வரவும் எனக்கு எதிர்ப்புறத்தில் அந்த பங்களாவை ஒட்டி பட்டியக்கல் போட்ட நடை பாதையில் இங்கிலீஷ்க்காரி மாதிரி நடந்து போகும் தேவதை போன்ற தங்க நிற  பெண்ணைப் பார்த்து சிலையாகி போனேன். யாருடா இது எங்க இருந்து வர்றா என்று மனதில் பல கேள்விகள். சற்று கூர்ந்து பார்த்தேன். உண்மையில்  மனம் கும்மாளம் போட்டது. அவள் என்னுடன் பழனியப்பா நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்தவள் . சௌராஷ்ட்ரா சமூகப் பெண் . அவள் பெயர் வசந்தா. அப்பொழுது அவளுடைய அமைதியான தோற்றமும் அவளுடைய நிறமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா நானும் அமைதியானவன் தான். அப்பவே நான் அவளை மனதிற்குள் ஜோடி போட்டு பார்த்திருக்கேன். அந்த வசந்தாவ   இவ !அதோட இப்ப ரொம்ப அழகா இருக்காளே!!என்று வியந்து போனேன். உடனே மனசு இவள் மட்டும் நமக்கு அமைந்துவிட்டால் வாழ்வில் இதை விட சொர்க்கம் ஏதுமில்லைன்னு மனசு என்னை விட வேகமா யோசிக்க ஆரம்பிச்சிருச்சு. படிப்பு வயசு இதெல்லாம் எதுவுமே என் கண்ணுக்கு தெரியல. ஆனால், அவள் தங்க நிறம் நானோ மாநிறம் அவளோ பேரழகு . எனக்கோ எத்துப் பல்  அவள் எப்படி என்னை ஏற்றுக் கொள்வாள்? முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டது போல் இருக்கிறதோ? என்று தாழ்வு மனப்பான்மை வந்தது. ஆனால் இங்கு நான் இறைவனை துணைக்கு அழைத்துக் கொண்டேன்.   இவ்வளவு நாள் இல்லாமல் இன்று இவள் ஏன் என் கண்ணுக்கு தட்டுப்பட வேண்டும்? கடவுளே எனக்கு காண்பிப்பது போல் மனம் தனக்குள் பேசி சமாதானப்படுத்திக் கொண்டது. அப்புறம் இந்த மனசு நிறைவேறாததுக்கு எல்லாம் எப்படி எப்படி எல்லாம் யோசிச்சு எங்க எங்க இருந்து எல்லாம் ஆதரவான விஷயங்களை சிபியூ மாதிரி தேடுது!! எங்கோ எதிலேயோ படித்த ஒன்றை மனசு ஞாபகத்துக்கு கொண்டு வந்தது : நாம் ஒருவரை லவ் பண்றோம்னா அவர்களுடைய முகம் நம்மள அதிகமா நேசிக்கிற நமக்கு பிடித்த அம்மா மாதிரியோ இல்ல பாட்டி மாதிரியோ இருக்கலாம் என்பதுதான். அப்பதான் எங்க அம்மாவ பெத்த தாத்தா ஆச்சி ஞாபகம் வந்தது. ராஜாங்கம் தாத்தா நல்ல கருப்பு ஆனா சுப்புலட்சுமி ஆச்சி தங்க நிறம். எங்க ஆட்சி மாதிரி பொறுமை அமைதி யாருக்கும் வராது. ரெண்டு பேருமே என்கிட்ட ரொம்ப பிரியமா இருப்பாங்க. எங்க அம்மாவுக்கு மூணாவதா எனக்கு தங்கச்சி பிறக்கவும் ,எங்க அம்மா என்னைய ஆச்சி கிட்ட தான் பாத்துக்க சொல்லி ரெண்டு வயசுல விட்டாங்க . அதுல இருந்து நானு ஆறு வயசு வரைக்கும் ஆச்சி வீட்ல பீபீகுளத்துலதான் வளர்ந்தேன். எங்க அம்மாவை விட எங்க ஆச்சி தான் என்னைய நல்லா பாத்துக்குவாங்க . எங்க அம்மாவும் அப்பாவும் திரும்ப என்னை வீட்டுக்கு கூப்டப்ப  கூட நான் இங்கேயே இருந்து படிச்சிக்கிறேன்னு சொன்னேன். அதனாலதான் என் தேவதை முகம் ஆச்சி நிறம் அவங்கள மாதிரியே அமைதி பொறுமை . இதுதான் என்னை சுண்டி இழுத்ததோ! இதெல்லாம் என் மனதிற்கு நான் கூறிக் கொண்ட சமாதானங்கள். நானும் வசந்தாவை  ஒரு வருடமாக அவள் டைப்ரைட்டிங் கிளாசுக்கு போகும் நேரத்தை கணக்கிட்டு நானும் பள்ளிக்குப் போவதை வழக்கமாக்கி அவளை பின்தொடர்ந்து கொண்டிருந்தேன். அப்புறம் ப்ளஸ் டூ பொதுத் தேர்வு வரவும் படிப்பில் கொஞ்சம் கவனத்தை திருப்பி விட்டேன். இந்த இடைவெளியில் வசந்தா பற்றி நினைக்க நேரம் இல்லாமல் போய்விட்டது. அதன்பின் பிளஸ் டூவில் ஆங்கிலத்தில் பெயில் ஆகி திரும்ப எழுதி பாஸ் செய்து அப்பா வேலை பார்த்த தியாகராசர் கலை கல்லூரியில் படித்து அதன் பின் எம் ஏ ஒரு வருடம் அதே கல்லூரியில் படித்து தமிழ்நாடு போலீஸ் வேலை கிடைத்ததால் வேலைக்கு சென்று திருமணம் முடித்து  வாழ்க்கையில் நெடுந்தூரம் வந்தபின் இந்த ரேணிகுண்டா படம் பார்க்கும் போது தான் நினைவுகள் வந்து மனசில் பழைய நினைவுகள் துளிர்விட்டது. அப்பத்தான் வசந்தா வீட்டு பக்கம் குடியிருந்த  எங்க  கூட படிச்ச சௌராஷ்ட்ரா பையன் உமேஷை ஏதேச்சையா மதுரையில பார்த்தேன். அப்ப அவன்ட்ட பேச்சுவாக்குல வசந்தா பத்தி கேட்டப்ப நல்லா இருக்கா சொக்கா . ஹஸ்பண்ட் பேங்க்ல வேலை பாக்குறாரு பிள்ளைங்க எல்லாம் இருக்கு. மதுரை மஹால்ல தான் குடியிருக்காங்க ஆனா கரெக்டா எங்கன்னு தெரியலைன்னு சொன்னான். இன்னைக்கும் வசந்தா என்ற பெயரை கேட்டாலே மனசு . பழைய மாதிரி ஆகுது. கடவுள் ஒரு நாள் கண்ணுல காண்பிக்க மாட்டானா?

 ரேணிகுண்டா


ரேணிகுண்டா படம் வந்தப்ப நான் தியேட்டர்ல போய் பார்த்தேன். 


அந்த படத்துல ஹீரோவும் -ஹீரோயினும் சந்தித்து காதல் வயப்படும் பாட்டு மழை பெய்யும் பொது ..... காட்சியில் அந்த ஹீரோயினை பார்த்து அப்படியே என்னை நான் மறந்து திரைக்குள் போய்விட்டேன்.


என் மனம் பழைய நினைவுகளுக்குள் சென்றது. 


ஒரு பெண் பிள்ளையை பார்த்து நான் முதன்முதலில் அசந்து காதல் வயப்பட்டதும் அந்தப் பெண் இதைவிட அழகாக இதே காஸ்டியூமில் இதைவிட கலராக நெறைய தலைமுடியுடன் அவளை நான் பார்த்து அதிசயத்த நாள் மனதில் படமாக ஓடியது.


நான் அப்ப  +1 மதுரை சௌராஷ்ட்ரா மேல்நிலைப் பள்ளியில் எக்கனாமிக்ஸ் படித்துக் கொண்டிருந்தேன். 


எப்பொழுதும் போல் காலையில் பள்ளிக்கு பாண்டிய மில்க் கேட் தெருவிலிருந்து மெயின் ரோட்டிற்கு வந்து கொண்டிருந்தேன். 


அந்த ரோட்டிற்கு மேற்கே மணல் ரோட்ட ஒட்டி ஒரு பங்களா இருக்கும்.

 அந்த மாதிரி பங்களாகாரங்கதான் சொந்தமா கார் வச்சிருப்பாங்க.

 அப்ப மதுரையில மொத்தமே ஒரு பத்து கார் தான் இருக்கும்.


நான் அந்த ரோட்டிற்கு நடந்து வரவும் எனக்கு எதிர்ப்புறத்தில் அந்த பங்களாவை ஒட்டி பட்டியக்கல் போட்ட நடை பாதையில் இங்கிலீஷ்க்காரி மாதிரி நடந்து போகும் 

 தேவதை போன்ற தங்க நிற  பெண்ணைப் பார்த்து சிலையாகி போனேன். 


யாருடா இது எங்க இருந்து வர்றா என்று மனதில் பல கேள்விகள்.


சற்று கூர்ந்து பார்த்தேன்.


உண்மையில்  மனம் கும்மாளம் போட்டது. 


அவள் என்னுடன் பழனியப்பா நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்தவள் .

சௌராஷ்ட்ரா சமூகப் பெண் . 

அவள் பெயர் வசந்தா.


அப்பொழுது அவளுடைய அமைதியான தோற்றமும் அவளுடைய நிறமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா நானும் அமைதியானவன் தான். 


அப்பவே நான் அவளை மனதிற்குள் ஜோடி போட்டு பார்த்திருக்கேன். 


அந்த வசந்தாவ   இவ !அதோட இப்ப ரொம்ப அழகா இருக்காளே!!என்று வியந்து போனேன். 


உடனே மனசு இவள் மட்டும் நமக்கு அமைந்துவிட்டால் வாழ்வில் இதை விட சொர்க்கம் ஏதுமில்லைன்னு மனசு என்னை விட வேகமா யோசிக்க ஆரம்பிச்சிருச்சு. 


படிப்பு வயசு இதெல்லாம் எதுவுமே என் கண்ணுக்கு தெரியல.


ஆனால், அவள் தங்க நிறம் நானோ மாநிறம் அவளோ பேரழகு .

எனக்கோ எத்துப் பல்  அவள் எப்படி என்னை ஏற்றுக் கொள்வாள்?

முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டது போல் இருக்கிறதோ? என்று தாழ்வு மனப்பான்மை வந்தது.


ஆனால் இங்கு நான் இறைவனை துணைக்கு அழைத்துக் கொண்டேன்.


  இவ்வளவு நாள் இல்லாமல் இன்று இவள் ஏன் என் கண்ணுக்கு தட்டுப்பட வேண்டும்?


 கடவுளே எனக்கு காண்பிப்பது போல் மனம் தனக்குள் பேசி சமாதானப்படுத்திக் கொண்டது.


அப்புறம் இந்த மனசு நிறைவேறாததுக்கு எல்லாம் எப்படி எப்படி எல்லாம் யோசிச்சு எங்க எங்க இருந்து எல்லாம் ஆதரவான விஷயங்களை சிபியூ மாதிரி தேடுது!!


 எங்கோ எதிலேயோ படித்த ஒன்றை மனசு ஞாபகத்துக்கு கொண்டு வந்தது :


நாம் ஒருவரை லவ் பண்றோம்னா அவர்களுடைய முகம் நம்மள அதிகமா நேசிக்கிற நமக்கு பிடித்த அம்மா மாதிரியோ இல்ல பாட்டி மாதிரியோ இருக்கலாம் என்பதுதான். 


 அப்பதான் எங்க அம்மாவ பெத்த தாத்தா ஆச்சி ஞாபகம் வந்தது. 

ராஜாங்கம்

தாத்தா நல்ல கருப்பு ஆனா சுப்புலட்சுமி ஆச்சி தங்க நிறம். 

எங்க ஆட்சி மாதிரி பொறுமை அமைதி யாருக்கும் வராது.

ரெண்டு பேருமே என்கிட்ட ரொம்ப பிரியமா இருப்பாங்க. 


எங்க அம்மாவுக்கு மூணாவதா எனக்கு தங்கச்சி பிறக்கவும் ,எங்க அம்மா என்னைய ஆச்சி கிட்ட தான் பாத்துக்க சொல்லி ரெண்டு வயசுல விட்டாங்க .


அதுல இருந்து நானு ஆறு வயசு வரைக்கும் ஆச்சி வீட்ல பீபீகுளத்துலதான் வளர்ந்தேன்.

எங்க அம்மாவை விட எங்க ஆச்சி தான் என்னைய நல்லா பாத்துக்குவாங்க . 


எங்க அம்மாவும் அப்பாவும் திரும்ப என்னை வீட்டுக்கு கூப்டப்ப  கூட நான் இங்கேயே இருந்து படிச்சிக்கிறேன்னு சொன்னேன்.


அதனாலதான் என் தேவதை முகம் ஆச்சி நிறம் அவங்கள மாதிரியே அமைதி பொறுமை .

இதுதான் என்னை சுண்டி இழுத்ததோ! 


இதெல்லாம் என் மனதிற்கு நான் கூறிக் கொண்ட சமாதானங்கள். 

நானும் வசந்தாவை  ஒரு வருடமாக அவள் டைப்ரைட்டிங் கிளாசுக்கு போகும் நேரத்தை கணக்கிட்டு நானும் பள்ளிக்குப் போவதை வழக்கமாக்கி அவளை பின்தொடர்ந்து கொண்டிருந்தேன். 


அப்புறம் ப்ளஸ் டூ பொதுத் தேர்வு வரவும் படிப்பில் கொஞ்சம் கவனத்தை திருப்பி விட்டேன். 

இந்த இடைவெளியில் வசந்தா பற்றி நினைக்க நேரம் இல்லாமல் போய்விட்டது. 


அதன்பின் பிளஸ் டூவில் ஆங்கிலத்தில் பெயில் ஆகி திரும்ப எழுதி பாஸ் செய்து அப்பா வேலை பார்த்த தியாகராசர் கலை கல்லூரியில் 

படித்து அதன் பின் எம் ஏ ஒரு வருடம் அதே கல்லூரியில் படித்து தமிழ்நாடு போலீஸ் வேலை கிடைத்ததால் வேலைக்கு சென்று திருமணம் முடித்து  வாழ்க்கையில் நெடுந்தூரம் வந்தபின் இந்த ரேணிகுண்டா படம் பார்க்கும் போது தான் நினைவுகள் வந்து மனசில் பழைய நினைவுகள் துளிர்விட்டது. 


 அப்பத்தான் வசந்தா வீட்டு பக்கம் குடியிருந்த  எங்க  கூட படிச்ச சௌராஷ்ட்ரா பையன் உமேஷை ஏதேச்சையா மதுரையில பார்த்தேன். 

அப்ப அவன்ட்ட பேச்சுவாக்குல 

வசந்தா பத்தி கேட்டப்ப நல்லா இருக்கா சொக்கா .


ஹஸ்பண்ட் பேங்க்ல வேலை பாக்குறாரு பிள்ளைங்க எல்லாம் இருக்கு.

 மதுரை மஹால்ல தான் குடியிருக்காங்க ஆனா கரெக்டா எங்கன்னு தெரியலைன்னு சொன்னான்.

இன்னைக்கும் வசந்தா என்ற பெயரை கேட்டாலே மனசு .


பழைய மாதிரி ஆகுது.

கடவுள் ஒரு நாள் கண்ணுல காண்பிக்க மாட்டானா?

ரிசர்வ்லைன்

 ரிசர்வ் லைன்  யூடியூபில் தற்செயலாக அமெரிக்க ஹார்வேர்ட் யுனிவர்சிட்டி சென்று தாவைகாவில் களப்பணி ஆற்றம் அஸ்விதா உடன் தினத்தந்தி சேனலில் நேர்...